முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட்டுவாகல் பாலத்தடியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி
போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்று(08.05.2025) கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதிகளவான பொலிஸார் 

குறித்த போராட்டமானது, வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு வட்டுவாகல் பகுதியில் இறுதியாக
கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று போராட்டம் நிறைவடைந்திருந்தது.

போராட்டத்தின் போது சர்வதேசமே பதில் சொல், சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன?,
பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம்,
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு
உண்மையும் நீதியும் வேண்டும், தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள்
சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ
உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில்
கிடந்து அழவைத்திருக்கிறது அரசு , போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி
பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

வட்டுவாகல் பாலத்தடியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் | Mullaitivu Protest Today

இதேவேளை, போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும் வழியில்
அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டடிருந்தமையும் குறிப்பிடதக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்