முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள உப்புமாவெளி கிராமத்தில் நடைபெற்று வரும் தையல் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் காட்டிவரும் அக்கறை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலவச பயிற்சி வகுப்பாக நடைபெற்று வரும் இந்த தையல் பயிற்சி வகுப்பில் பங்கெடுக்கும் மாணவர்கள் போதியளவில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

ஆரம்ப நாட்களில் அதிகளவிலான மாணவர்கள் இணைந்து பயிற்சியினை பெற்று வரும் போதும் பயிற்சியின் இறுதி நாட்களில் அந்த எண்ணிக்கை குறைந்து சென்றுவிடுவதனை அவதானிக்க முடிகின்றது.

பயிற்சி பெற்றவர்கள் தொழில் முயற்சியில் ஈடுபடும் அளவிலும் பாராட்டத்தக்க வெளிப்பாடுகளை அவதானிக்க முடியவில்லை என்பதும் குறித்துரைக்கப்படுவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிக முன்னுரிமை 

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் முயற்சியினால் இலவச பயிற்சி வகுப்பாக இந்த தையல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது.

மாணவர்களின் பயிற்சித் தேவைக்கான துணிவகைகளையும் ஏனைய பொருட்களையும் பெற்றுக்கொடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் பயிற்சி ஆசிரியரையும் தானே ஏற்பாடு செய்துள்ளது.

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Sewing Training Course

சுய பொருளாதார முன்னேற்றத்துக்கான சுயதொழில் மேம்படுத்தலை அடிப்படையாக கொண்ட பயிற்சி வகுப்புக்களாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்தோடு வந்து கலந்து கொள்ளும் மாணவர்கள் நாளடைவில் பல காரணங்களை முன் வைத்து இடைவிலகி விடுகின்றனர்.
ஒவ்வொரு மாணவரும் முன் வைக்கும் காரணங்கள் அவர்களின் தனிப்பட்ட காரணங்களாகவே இருக்கின்றன என தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் கருத்துரைத்த அவ்வூர் சமூக ஆர்வலர் குறிப்பிடுகின்றார்.

உப்புமாவெளி கிராம மக்களின் தனியாள் வேலையாற்றும் திறனை மேம்படுத்துவதில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அதிகளவில் முன்னுரிமை வழங்கி செயற்படுவது பாராட்டத்தக்கது.பயனாளர்கள் இது தொடர்பில் அதிக கவனகெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேறிய விளைவு

கடந்த காலங்களில் நடந்து முடிந்த தையல் பயிற்சி வகுப்புக்களில் பலர் கலந்து கொண்டு பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளனர்.

இவர்களிடையே ஒரு சிலரே தையல் முயற்சியை தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

உள்ளூரில் உள்ள தையலுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பழைய தையலாளர்கள் அதிகளவில் இருப்பதால் தாம் தையலை ஒரு தொழிலாக கொள்ள முடியவில்லை என காரணம் சொல்லும் பயிற்சி முடித்த மாணவர்களையும் சந்திக்க முடிந்திருந்தது.

போட்டி மிக்க ஒரு முயற்சியாக முல்லைத்தீவில் தையல் தொழில் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என தையல் பயிற்சி ஆசிரியை ஒருவரும் இது தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்து விளக்கியிருந்தார்.

வேறு பயிற்சிகளும் வேண்டும் 

பயிற்சி வகுப்புக்களை ஒழுங்கமைக்கும் போது தையல் பயிற்சிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காது நிதி முகாமை மற்றும் சந்தைப்படுத்தல் உபாயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் படி பயிற்சி வகுப்புக்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

இந்த முயற்சி முழு வெற்றியடைவதற்கு தையல் பயிற்சிகள் மட்டும் போதாது.அத்தோடு இணைந்த தொழில் நிறுவன கட்டமைப்புக்களின் மாதிரிகளை குறைந்தளவிற்கேனும் மாணவர்களிடையே அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Sewing Training Course

பயிற்சி முடிவின் பின்னர் கட்டமைக்கப்பட்ட சிறியளவிலான நிறுவன அமைப்பை உருவாக்கி அதனூடாக தங்கள் முயற்சிகளை விரிவாக்குவதற்கான ஆரம்ப அறிவாக இவை இருக்க வேண்டும்.

ஏற்றுமதிக்கான தையல் முயற்சி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான புதிய அணுகு முறைகள் என இவர்களின் சிந்தனை விரிவாக்கப்படும் போது தேறிய வருமானம் அதிகரிக்கும்.

வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழில் முறையின் பயிற்சி வகுப்பாக இந்த தையல் பயிற்சி வகுப்பு இருந்து விடுமானால் அதில் முழு கவனத்தோடும் ஆர்வத்தோடும் மாணவர்கள் கலந்து கொண்டு பயிறிசியை முடித்துக் கொள்வார்கள்.

பயிற்சி முடித்தவர்களின் வருமானம் ஈட்டும் முயற்சிகளும் வினைத்திறன் மிக்கவையாக இருக்கும் என சமூக விடய ஆய்வாளர் குறிப்பிடுவதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

பொருத்தமான முயற்சிகள் 

உப்புமாவெளியில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முயற்சியினால் மூன்றாவது தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதலாவது குழுவுக்கான பயிற்சி வகுப்புக்களை முடிந்துள்ளது.இரண்டாவது பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டவர்களின் இறுதி நாள் நிகழ்வுகளை படத்தில் காணலாம்.

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Sewing Training Course

நிறுவனம் சார்ந்தோர் மற்றும் உடுப்புக்குளம் குழந்தை யேசு ஆலய பங்குத்தந்தை, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிகழ்வாக அந்நிகழ்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருபதுக்கும் அதிகமான மாணவர்கள் ஆரம்ப நாட்களில் கலந்து கொண்ட போதும் இறுதியில் ஆறு மாணவர்களே இரண்டாவது குழுவில் பயிற்சியை முடித்துக் கொண்டனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆயினும் மூன்றாவது பயிற்சிக் குழுவில்
25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துள்ளதாக தையல் பயிற்சி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

தையல் பயிற்சி செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கவையாக மேம்படுத்தப்படும் போது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முயற்சி சமூகத்தின் பொருளாதர வளர்ச்சியில் கணிசமான ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பாரியளவில் உதவி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.