முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு – கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல்

புதிய இணைப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் (26) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 

தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,
இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றினார்.  

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு - கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல் | Mullaitivu Tribute Thiyaya Theepam Thileepan

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

செய்தி – தீபன்

முதலாம் இணைப்பு

தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம்
திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி
புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழ்
தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

செய்தி – குமார்

புதிய இணைப்பு

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு 

அந்தவகையில் மௌன அஞ்சலியுடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு - கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல் | Mullaitivu Tribute Thiyaya Theepam Thileepan

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் புதுக்குடியிருப்பில்
இடம்பெற்றிருந்தது.

வடக்கு - கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல் | Mullaitivu Tribute Thiyaya Theepam Thileepan

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக
தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம்
புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.

செய்தி – ஷான்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.