முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது

டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன் ஆலயத்தை சூழ நின்ற மரங்களும் பாறி விழுந்துள்ளன.

இதேவேளை முல்லைத்தீவில் சில பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க
அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் நிலமைக

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க
அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (30) கருத்து தெரிவித்த போதே
இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது | Mullaitivu Vattappalai Amman Temple Also Flooded

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான
பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1550
குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டு 42 இடைத்தங்கல் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

2000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5400 பேர் வரை உறவினர்கள்
நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள்.

இந்த கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கவில்லை காரணம் முல்லைத்தீவு மாவட்டம்
முற்றாக தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 28ம் ,29 ஆம் திகதிகளில் மின்னசாரம் தொலைத்தொடர்பு இல்லை (இன்றுதான்
(30) மின்சாரம் தொலைத்தொடர்புகள் சற்று சீர்செய்யப்பட்டு வருகின்றன)
தற்போது தொலைத் தொடர்பு வசதிகள் சீர்செய்யப்பட்டாலும் முழுமையாக தொலைத்
தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 90ஆயிரத்திற்கு
மேற்பட்ட மக்கள் இயல்புநிலை மிகமோசமாக பதிக்கப்பட்ட நிலையில் அவர்களின்
வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

45ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ள்தில் மூழ்கியுள்ளதால் அவை
முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது” என கூறியுள்ளார்.

செய்தி – தவசீலன்

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.