முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

புதிய இணைப்பு

மட்டக்களப்பு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று (18) தீபச்
சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikal Commemoration In Batticaloa 2025 May18

குறித்த நினைவேந்தல் நிகழ்வு வாகரை
முகத்துவாரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர் கட்டித்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன் உட்படகட்சியின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான
பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி
அனுஷ்டித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikal Commemoration In Batticaloa 2025 May18

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikal Commemoration In Batticaloa 2025 May18

முதலாம் இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு – அம்பிளாந்துறை
வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளின் 16வது ஆண்டு நினைவு தின நிகழ்வு மிகவும் உணர்பு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் அம்பிளாந்துறை வட்டாரக்கிளையின் தலைவர்
மா.ஜீவரெத்தினம் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள்
தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம், தழிழரசுக் கட்சியிலிருந்து தற்போது மண்முனை
தென்மேற்கு பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை
உறுப்பினர்கள், ஆலயங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், உள்ளிட்ட பொது
அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு
பரிமாறப்பட்டதுடன், 16 சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம்
செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நினைவஞ்சலி உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikal Commemoration In Batticaloa 2025 May18

முதலாம் இணைப்பு

தமிழினப் படுகொலையில் 16ஆம் ஆண்டு நினைவு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் (Batticaloa) அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – காந்தி பூங்காவில்
இன்று (18) காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு,
அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikal Commemoration In Batticaloa 2025 May18

நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்
நீத்தவர்களுக்காக சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும்
பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.