முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முள்ளியவளை பிரதேச சபையினரின் பாராமுகம் : மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி

Courtesy: uky(ஊகி)

முள்ளியவளை உப பிரதேச சபையினரின் பாராமுகமான செயல்பாட்டினால் பொதுமக்கள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் செயற்பாடுகளை சரியான முறையில் செய்து கொள்ளாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேச எல்லைக்குள் இருக்கும் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் உள்ள குப்பைகளை நாளாந்தம் அகற்றி இடங்களை சுத்தமாக பேணுவதில் ஈடுபட்டு வரவேண்டிய அவர்கள் இப்போதெல்லாம் இவ்விடயத்தில் காட்டும் அக்கறை குறைந்து செல்வதாக பொதுமக்களில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பாடசாலையினர் எதிர்கொள்ளும் சவால்

தண்ணீரூற்றில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றும் பிரதேச சபையினரின் அக்கறையற்ற போக்கினால் நெருக்கடியை எதிர்கொள்வதை அவதானிக்கலாம்.

தரம் ஐந்து வரையான மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அரச பாடசாலையான இப்பாடசாலையில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

முள்ளியவளை பிரதேச சபையினரின் பாராமுகம் : மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி | Mulliyawela Pradeshiya Sabha Crisis Faced People

பாடசாலையில் உள்ள அகற்றப்பட வேண்டிய கழிவுப் பொருட்களை கொண்ட பொதிகள் பல பாடசாலைக்கு முன்னாக வைக்கப்பட்டுள்ளது.

ஒருவாரம் கடந்த நிலையிலும் அவை இதுவரை அகற்றப்படாது அப்படியே இருந்து வருவது தொடர்பில் பிரதேச சபையினரின் செயற்பாடுகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்துவதையும் அவதானிக்கலாம்.

சிறார்களின் ஆரோக்கியமான வாழ்வையும் கற்றலையும் கருத்தில் எடுத்துக்கொள்ளல் அவசியமாகும் போது இவ்வாறான குப்பைப் பொதிகள் உடனுக்குடன் அகற்றப்படுதலும் அவசியமாகும் என்பதை புரிந்து செயற்படுவார்களா பிரதேச சபையினர் என தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் சமூக ஆர்வலர்களையும் சந்திக்க முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

குமுழமுனைச் சந்தியின் நிலை 

தண்ணீரூற்றில் இருந்து ஆரம்பமாகும் குமுழமுனைக்கான பாதை மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் சந்திக்கும் சந்தியை, குமுழமுனைச் சந்தி என அப்பகுதி மக்கள் அழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முள்ளியவளை காவல்துறை அலுவலகம் இயங்கி வந்த இடமும் இச்சந்தியில் இருந்ததால் இவ்விடத்தினை காவல்துறை சந்தி என 2009 க்கு முன் அழைத்து வந்த மக்களிடையே இன்றும் அவ்வாறு குறிப்பிடும் மக்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது.

முள்ளியவளை பிரதேச சபையினரின் பாராமுகம் : மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி | Mulliyawela Pradeshiya Sabha Crisis Faced People

இவ்விடத்தில் குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டிருந்தது.அதனால் அவ்விடம் மிகவும் மோசமான நிலையினை அடைந்தால் அவை அகற்றப்பட்டு அவ்விடம் சுத்தம் செய்யப்பட்டது.

அத்தோடு “இவ்விடத்தில் குப்பைகளை போட வேண்டாம்” என அறிவுறுத்தும் அறிவித்தலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

எனினும், இப்போது நிலைமை மாறி விட்டது.குப்பைக் கூடைகள் இல்லை.ஆனாலும் குப்பைகளைக் கொண்ட பொதிகளை மக்கள் சிலர் கொண்டு வந்து வைத்து விட்டு செல்கின்றனர்.வாரக்கணக்கில் அவை எடுத்தகற்றப்படாது வீதியின் ஓரத்திலேயே இருக்கின்றது.

இதனால், காகங்கள் மற்றும் நாய்களினால் அப்பொதிகள் கிழிக்கப்பட்டு அதனுள் இருக்கும் குப்பைகள் அவ்விடத்தில் பரவிக் கொள்வதால், அவ்விடம் அசுத்தமடைந்து போகும் நிலை ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொறுப்பான செயற்பாடுகள் 

பொறுப்பான செயற்பாடுகளை பிரதேச சபையினர் வெளிப்படுத்தும் போது இந்த துர்ப்பாக்கிய நிலையினை முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்று, அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிடாது.

அவர்களால் மேற்கொள்ளப்படும், நாளாந்தம் குப்பைகள் எடுத்தகற்றும் செயற்பாடு சரியாக நடைபெற்று வருமானால்; பிரதேசங்களில் குப்பைகள் தேங்குவதை, இயன்றளவில் தவிர்க்க முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முள்ளியவளை பிரதேச சபையினரின் பாராமுகம் : மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி | Mulliyawela Pradeshiya Sabha Crisis Faced People

பிரதேசத்தில் உள்ள குப்பைகளை எடுத்தகற்றுவதை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடுவித்து அதனை பிரதேச சபையினர் மேற்பார்வை செய்யும் ஒரு சூழல் கூட ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திவிட வாய்ப்பாக அமையலாம் எனவும் சமூகவியல் நோக்கரான வரதனும் குறிப்பிடுகின்றார்.

நாம் வாழும் சூழலை சுத்தமாக பேணி தொற்று நோய்கள் பரம்பலடைதலை தடுப்பதற்கான வழிமுறைகளை பேணிக் கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்கும் போது தான் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது மலைமேல் விளக்கமாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.