நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 800 வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தத் தவறியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
இந்த வைத்தியர்கள் தொடர்பில் சட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால கோப் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மோசமான நிர்வாகம்
அத்துடன், 31 மில்லியன் ரூபா செலவில் கொண்டுவரப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமை தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனைய அமைச்சுகளுடன் ஒப்பிடும் போது அதிகளவு மேலதிக நேரங்களை செலுத்தும் சுகாதார அமைச்சின் மோசமான நிர்வாகம் நாட்டுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.