வடக்கில் உள்ள 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும், வடக்கில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


