மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட தேசிய புலனாய்வுத் துறையின் (CNI) புதிய
தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வு நேற்று(28) ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
நியமனம்
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவிடம்
இருந்து, நியமனக் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாகப்
பதவியேற்றார்.

இதேவேளை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ருவன் வணிகசேகர நேற்று
பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

