நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவின் போது வயதான மூதாட்டி ஒருவருக்கு ஆலய வளாகத்திற்குள் செல்வதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தில் தேர்திருவிழா இடம்பெற்று கொண்டிருந்த போது ஆலய மதில் வழியாக செல்வதற்கு குறித்த பாட்டி முனைந்துள்ளார்.
இதன்போது, அங்கு காவலுக்கு இருந்த பொலிஸார் அந்த மூதாட்டி உள்ளிட்ட சிறுவர்களுக்கு அவ்வழியாக செல்வதற்கு பொலிஸார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.
அத்துடன், “இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் ஒருவரால் ஆலயத்திற்குள் ஜீப் ரக வாகனத்தில் வரும் பிக்குகளிற்கு அனுமதி வழங்குகின்றீர்கள், ஆனால் எங்களை அனுமதிக்க முடியாதா” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த அதிகாரிகள் மூதாட்டிக்கு அனுமதி வழங்காததுடன் அசமந்த போக்காக பதிலும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சம்பவம் பதிவு செய்யப்பட்ட காணொளி பின்வருமாறு,