நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (24.03.2025) காலை பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலந்து கொண்டோர்
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார்
உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள்
தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்,
இராமநாதன் அர்ச்சுனா, சிறீ பவனாந்தராஜா உள்ளிட்டோரும் துறை சார் திணைக்கள
பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவகர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.