வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
மகோற்சவ பெருவிழா இடம்பெற்று வருகின்றது.
19ஆம் நாள் திருவிழாவான இன்று காலை சூர்யோற்சவ உற்சவம்
மிக சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு
குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும்
வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.