நல்லூர்(nallur) தேர்த் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் தனது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
“நல்லூர் தேர்த் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நான் தீர்மானித்துள்ளேன்.
நல்லூர் திருவிழா
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆலயத்தின் கலாசார முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு புனிதமான நேரத்தில் இந்த மரபுகளை பேணி பாதுகாப்பது முக்கியம் என நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.