நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டு,சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.15 மில்லியன் பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (07.08.2025) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்சவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
பணமோசடி
இந்த விசாரணை தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இன்னும் பெறப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முறைப்பாட்டை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்ட நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக நினைவூட்டல்களை அனுப்பவும் உத்தரவிட்டார்.
முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் முறைப்பாடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

