மண்சரிவு ஏற்பட்ட பல பகுதிகளில் உள்ள தாழ் நிலங்கள் உறுதியற்ற நிலையில் இருப்பதாக (NBRO) தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அத்தியட்சகர் பொறியியலாளர் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள தாழ் பகுதிகளில் முன்னர் ஏற்பட்ட மண்சரிவுகளில் பாரிய வெடிப்புகள் மற்றும் நீர் வெளியேறுதல் போன்வற்றால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து கொள்வதற்காக பொறியியல் தொழில்நுட்ப உதவியை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்பட்டுள்ள பாதிப்பு
மேலும் வெளிநாட்டு பொறியியலாளர்களின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பேராதனை, மொரட்டுவை பல்கலைக்கழகத்திலுள்ள புவியியல் போராசிரியர்கள் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய 60 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. கன மழையினால் 10 மீட்டருக்கும் அதிகமான பாரிய மண்சரிவுகள் 1241 ஏற்பட்டுள்ளன.
10 மீட்டருக்கும் அதிகமான பாரிய மண்சரிவுகள் செய்மதி படங்களுக்கு தெரிவதோடு அதற்கு குறைவானவை தெரிவதில்லை என்றார்.
150 மில்லி மீட்டர் மழை பெய்தாலே மலைப் பகுதிகளின் பள்ளத்தாக்குகளில் மண்சரிவு ஏற்படுவது சகஜமாகும்.
ஆனால் இம்முறை 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.அதுவே அதிக மண்சரிவுகளுக்கு காரணமானது.
இந்நாட்டின் பெருந்தோட்ட மலைப்பகுதிகளுக்கு வருடத்திற்கு 5000 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கிடைப்பதாகும்.
ஆனால் இது குறுகிய மூன்று நாட்களில் 1000 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

