கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டமானது இன்றையதினம் நாடளாவிய ரீதியில் அனைத்து
பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வட்டுக்கோட்டை
இந்துக் கல்லூரியிலும் இந்த கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டமானது கல்லூரியின்
பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வு ஆரம்பம்
இந்த நிகழ்வானது தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பமானது..
அதனை தொடர்ந்து
தொடர்ந்து டெங்கு ஒழிப்பும் சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வு வீதி நாடகம்,
சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கவனயீர்ப்பு நடவடிக்கை, சிரமதானம், கண்காட்சி
என்பன இடம்பெற்றன. பின்னர் இடைவேளைக்கு பின்னர் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கலை நிகழ்வுகள்
இதன்போது டெங்கு,
சிக்குன்குனியா, யானைக்கால் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு குழுப் பாடல்,
கவிதைகள், நடனங்கள், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் கல்லூரியின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பொது சுகாதார பரிசோதகர் மோகனரூபன், பெற்றோர், பழைய மாணவர்கள்
மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






