தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழ் மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள், இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர் என்ற சிந்தனைக்குள் வந்துவிட்டார்கள் – இப்படியான பொதுப் பார்வைதான் இன்று பரவலாக இருந்து வருகின்றது.
‘தமிழ் தேசியம்’ என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ் மக்கள் மெல்ல மெல்ல விலகி, ‘ இலங்கைத் தேசியம்’ என்ற எண்ணப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருக்கின்றார்கள் என்கின்றதான பாராட்டுக்களும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
- இது எந்த அளவுக்கு உண்மை?
- தமிழ் மக்கள் உண்மையிலேயே தமது அரசியல் விடுதலையை அடைந்துவிட்டார்களா?
- இனவாதம் இலங்கையை விட்டு முற்றாகவே நீங்கிச்சென்றுவிட்டதா?
- ஜே.வி.பி – இதுவரை யாருமே வழங்காத ஒரு நல்லாட்சியை தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்றது என்பது உண்மையா?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: