அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ‘தங்க பேஜரை’ ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (04.02.2025) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார்.
தங்க பேஜர்
மேலும், இருவரும் அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்ததுடன் இஸ்ரேல் – ஹமாஸ், இஸ்ரேல் – ஹிஸ்புல்லா, ஈரான் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
இந்தநிலையில் இந்த பயணத்தின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தங்கத்தால் ஆன பேஜரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசாக அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து கடந்த ஆண்டு இஸ்ரேல் பேஜர் தாக்குதல் நடத்தியது . இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 42 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நெதன்யாகு பரிசாக அளித்த “தங்க பேஜர்” கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பேஜர் தாக்குதலை சுட்டும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.