காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ தளபதி இயால் ஜமீர் திட்டமிட்டுள்ளதாக பிரதமரின் மகன் யாயர் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் காசா மீது போர் இரண்டாம் ஆண்டை எட்டிக்கொண்டிருக்கிறது. காசா மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் குறைந்தபட்சமாக திரைமறைவில் நடைபெறுவதாக பரவலான விமர்சனங்கள் உள்ளன.
ரகசிய திட்டம்
இந்நிலையில், பிரதமரின் மகன் யாயர் தனது எக்ஸ் பக்கத்தில், ராணுவ தளபதி இயால் ஜமீர் அரசு ஆட்சியை கைப்பற்ற ரகசிய திட்டம் வகுக்கிறார் என்றும், அதற்காக நாட்டினுள் கலவரங்களை உருவாக்க திட்டமிடுகிறார் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை தளபதி இயால் ஜமீர் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடுமையான எதிர்ப்பு
இது தொடர்பில் அவர் தனது சமூக வளைத்தள பக்கத்தில், “நான் எந்த நேரத்திலும் அரசை கவிழ்க்க சதி செய்யவில்லை.
சமூக வலைதளங்களின் மூலமாக என்னை குறைகூறி, அச்சுறுத்த முயல்வது ஏற்க முடியாதது.
போரின் நடுவில் இதுபோன்றவாறு நடப்பது யாருக்காக?” என அவர் எதிர்வினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாயர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குறித்த சம்பவம் இஸ்ரேலின் உள்நாட்டுக் கட்டமைப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இராணுவம் மற்றும் அரசாங்கத்துக்குள் உள்ள நம்பிக்கையின்மை, பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

