எந்தவொரு சீர்குலைவு முடிவுகளும் நாட்டி முன்னேற்றத்திற்கு இன்றியமையாத கடின உழைப்பின் முன்னேற்றத்தை பாதிக்கலாம் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) எச்சரித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்திற்கு புதிய நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சீர்திருத்தத் திட்டம்
இதேவேளை, ஜூன் 2023 க்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க டாலரின் விற்பனை பெறுமதி 300 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
It is great to see that the ambitious reform programme, carried out during the most difficult economic crises, is now bearing fruit. As a result, the selling rate of the US dollar has dropped below Rs. 300 for the first time since June, 2023. I urge the new administration to… pic.twitter.com/HExxQ7iUVo
— Shehan Semasinghe (@ShehanSema) October 2, 2024
இதன் படி, மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடிகளின் போது மேற்கொள்ளப்பட்ட லட்சிய சீர்திருத்தத் திட்டம் இப்போது பலனைத் தந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.