மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்றையதினம் (18.11.2024) இடம்பெற்றது.
பதவிப்பிரமாணம்
இதன் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதியான அம்பிகா சாமுவேல், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள இளைஞர்கள் அரசியலில் தீவிர பங்கு வகிக்கும் திறன் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.