இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோர் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நியமனங்கள்
புதிய துணை ஆளுநர்கள் முறையே ஜூன் 20 மற்றும் ஜூன் 24 முதல் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கி ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டபடி, நிதி அமைச்சரினால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.