47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இப்போது தயாராகியுள்ளதாக கூறப்படும் கருத்தின் பக்கம் இலங்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சமூகங்களின் பார்வை திரும்பியுள்ளது.
இப்போது முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் – எண். 2026” என்ற புதிய சட்டம் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் நடவடிக்கையாகும்.
இந்நிலையில் இந்த சட்டமூலம் இலங்கை மற்றும் குறிப்பாக ஈழதமிழர்களுக்கு எவ்வாறான தாக்கங்களை செலுத்தவுள்ளது என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி…
https://www.youtube.com/embed/jEVPIeSYBNY

