அரசாங்க அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடொன்றை முன்னெடுக்க பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் வாரத்தை நாடு தழுவிய ரீதியல் அரசாங்க அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் வாரமாக கடைப்பிடிக்க பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த வாரத்தில் அரசாங்க அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கும் தேவையற்ற கோப்புகள் உள்ளிட்ட சகல பொருட்களும் அகற்றப்படும்.
புதிய செயற்திட்டம்
அதற்கு முன்னதாக தேவையான மற்றும் தேவையற்ற பொருட்கள், கோப்புகளை இனங்காணுமாறு சகல அரசாங்க நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்களின் பணிச்சுமையை குறைத்தல், சிநேகபூர்வ அலுவலக சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை கருத்திற் கொண்டே மேற்குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

