முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதிக்கான புதிய விதிமுறைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நேற்றையதினம்(27.01.2025) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளின் கீழ் கடன் கடிதங்கள்(LOC – Letter of Credit) வழங்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கப் பணிப்பாளருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கமைய டிசம்பர் 18ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகள்

1. வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 90 நாட்களுக்குள் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வாகனத்தை பதிவு செய்யும் போது, இறக்குமதியாளர்கள் தங்கள் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தையும்(TIN) சமர்ப்பிக்க வேண்டும்.

2. மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யாத சொந்தத் தேவைக்கு வாகனம் வாங்கும் தனிநபர்கள், வருடத்துக்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

vehicle import gazette

3. வாகன இறக்குமதியாளர்கள், 6 மாத காலத்திற்குள் தமக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து 25 சதவீதத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்திருப்பின், மூன்று வருட இறக்குமதித் தடையை எதிர்கொள்வார்கள்.

4. விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், 90 நாட்களுக்குள் இறக்குமதியாளர்களின் சொந்த செலவில் மீள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.