முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் : ​சைபர் தாக்குதல் எதிரொலி

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலின் எதிரொலியாக அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான தகவலை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.

உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச அச்சுத் திணைக்களத்தின் இணையதளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, அரச அச்சுத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் : ​சைபர் தாக்குதல் எதிரொலி | New Website For Government Printing Department

சைபர் தாக்குதலின் பின்னர் உத்தியோகபூர்வ இணையத்தளம் துரிதமாக மீளமைக்கப்பட்டுள்ளது.

எனினும் சைபர் தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் குறித்து இதுவரை உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

அதன் காரணமாகவே பாதுகாப்பு அம்சங்களைக் கருத்திற் கொண்டு அரச அச்சுத் திணைக்களத்துக்கான புதிய இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் உதவி

கடந்த 2024ம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்திருந்தது.

அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் : ​சைபர் தாக்குதல் எதிரொலி | New Website For Government Printing Department

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள்ள அனுமதியின்றி உட்பிரவேசித்திருந்தார்.

குறித்த நபர் அச்சுத் திணைக்களத்துக்கு தொடர்பற்ற விடயங்கள் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட முயற்சித்த நிலையில் அதிகாரிகளால் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் உதவியுடன் குறித்த இணையத்தளம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.