கொழும்பின் புறநகர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற விருந்தின் போது அருந்திய பானத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 19 வயதான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞன் மரணம்
நண்பர்களுடன் இணைந்து நள்ளிரவில் புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அருந்திய பானம் ஒவ்வாமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.