மலர்ந்துள்ள புதிய ஆண்டினை வரவேற்று நள்ளிரவு முதல் இசை
நிகழ்ச்சிகள், நாட்டிய நடனங்கள், வான வேடிக்கைகள் என பல்வேறு நிகழ்வுகள்
இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து இன்று (01.01.2025) மலர்ந்துள்ள புதிய புத்தாண்டினை வரவேற்று ஆலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு
ஆங்கல புதுவருடப் பிறப்பை முன்னிட்ட நள்ளிரவு விசேட ஆராதனை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில்
ஆராதனை இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில்
ஈடுபட்டனர்.
செய்தி – ருசாத்
மன்னார்
மன்னார் மறைமாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி கடும் மழைக்கு
மத்தியில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக
ஒப்புக் கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ, இந்த ஆண்டின் ஆசீர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் நிரம்பக் கிடைக்க
வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும், பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான
எதிர்பார்ப்பு தரக்கூடிய ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.என அவர் தெரிவித்தார்.
செய்தி – ஆஷிக்
மலையகம்
புதிய ஆண்டினை வரவேற்று மலையக
ஆலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன்
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூஜைகள் ஆலய பிரதம குரு
சந்திரநந்த குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
செய்தி – மலைவாஞ்சன், திருமல்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் புத்தாண்டினை வரவேற்றும் முகமாக நல்லூர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.
செய்தி – தீபன்
கிளிநொச்சி
புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூசை வழிபாடுகள் கிளிநொச்சியிலுள்ள
தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
கிளிநொச்சி 155ம் கட்டை புனித அந்தோனியார்
ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.