ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது அடுத்த அதிகாரப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) புறப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
களுத்துறையில் நடந்த ஒரு கூட்டத்தில் இன்று (19) ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து உத்தியோகப்பூர்வ அழைப்பு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் இறக்குமதி
குறிஇலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்கத்துக்கு -அரசாங்கம் ஒப்பந்தத்தின் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராயும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் இந்திய விஜயத்தை முடித்த கொண்ட ஜனாதிபதி அநுர, சீனாவிற்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.