முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டித்வா புயலின் அடுத்த கட்ட நகர்வு – அடுத்துவரும் 24 மணித்தியாலயத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

“டித்வா” ( Ditwah ) சூறாவளியானது தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு திசையாக சுமார் 130 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது வடக்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் அடுத்துவரும் 24 மணத்தியாலத்தில் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

டித்வா புயலின் அடுத்த கட்ட நகர்வு - அடுத்துவரும் 24 மணித்தியாலயத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | Next Phase Of Cyclone Titva In 24 Hours

டித்வா சூறாவளியின் தாக்கம்

டித்வா சூறாவளியின் தாக்கத்தின் காரணமாக திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 70 கிலோமீற்றரா அதிகரித்தும் காணப்படும்.

இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

டித்வா புயலின் அடுத்த கட்ட நகர்வு - அடுத்துவரும் 24 மணித்தியாலயத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | Next Phase Of Cyclone Titva In 24 Hours

ஆகையினால் குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 – 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.