சித்திரவதைக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Thennakoon) சந்தித்ததற்காக கனேடிய பீல் பிராந்திய காவல்துறை மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குளோபல் நியூஸ் படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள், பீல் பிராந்திய காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023 அன்று தலைநகர் கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்தமையை காட்டிய புகைப்படங்களில் இருந்த சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளில் ஒருவரான இலங்கை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை “இரக்கமின்றி” தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
2023 டிசம்பர் 14, அன்று, இலங்கையின் உயர் நீதிமன்றம், திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை, தென்னக்கோன் கொடூரமாக கைது செய்ததில் ஈடுபட்டதாக தீர்ப்பளித்தது,
அவர், 24 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தின் “சித்திரவதை அறை” என்று அழைக்கும் இடத்தில் வைத்து, சந்தேக நபரை தாக்கியுள்ளார் மற்றும் அவரை மூச்சுத் திணறடித்து, அவரது பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தடவினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.
கனடாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம்!
மரியாதை பெறுவது
இந்தநிலையில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தமிழ் கார்டியன் வெளியீட்டை நடத்தும் மருத்துவர் துசியன் நந்தகுமார், பீல் காவல்துறை அதிபரின் செயல் “கனடாவின் நற்பெயருக்குக் களங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் காவல்துறை அதிபர் ஒருவர், இலங்கையில் பல முறைகேடுகளுக்கு காரணமான அதே நிறுவனத்திடம் இருந்து மரியாதையை பெறுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று நந்தகுமார் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குளோபல் நியூஸின் நேர்காணலுக்கான கோரிக்கையை துரையப்பா நிராகரித்தார். எனினும், பீல் பிராந்திய காவல்துறையின் பேச்சாளர், துரையப்பாவின் இலங்கை பயணத்தை “தனிப்பட்டது என்றும், “பீல் பிராந்திய காவல்துறைக்கும் இலங்கையில் உள்ள எந்தவொரு அமைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார், இருப்பினும் துரையப்பா தனது பீல் காவல்துறை சீருடையை அணிந்து பலமுறை புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்.
இலங்கை மீது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
காவல்துறை அதிகாரிகளின் அழைப்பு
கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரதிகா சிற்சபேசன், ஒருவர் சீருடை அணிந்தால், “நீங்கள் தலைவராக உள்ள அமைப்பை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்” என்றே அர்த்தம் என்று கூறியுள்ளார்.
இது, ஒரு கனேடியனாக, பீல் பகுதியில் வளர்ந்தவள் என்ற முறையில் தனக்கும், பீலில் தொடர்ந்து வாழும், தமிழர்களாக அடையாளம் காணும் அனைத்து மக்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்பதே தமது கருத்து” என்று சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
துரையப்பா தனது குடும்ப விடுமுறைக்காக அவர் பிறந்த நாட்டிற்குச் சென்றிருந்தபோது, இலங்கை காவல்துறை அதிகாரிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துரையப்பா தென்னகோனை நேரடியாகச் சந்தித்தாரா என்று கேட்டபோது, பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தவில்லை,
அவர்கள் ஒன்றாக நிற்பதையும் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிடும்போது துரையப்பாவின் பின்னால், தென்னக்கோன் நிற்பதையும் புகைப்படம் காட்டுகிறது.
காசாவில் நூற்றுக்கணக்கான உடல்களைக் கொண்ட புதைகுழிகள்: அச்சத்தில் ஐ.நா
கூடுதல் சந்திப்புகள்
புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வு ஒரே கூட்டமா அல்லது துரையப்பாவும் தென்னகோனும் ஒன்றாக புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்திற்கு வெளியே சந்தித்தார்களா என்பது உட்பட ஏதேனும் கூடுதல் சந்திப்புகள் நடைபெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், அண்மைய தீர்ப்பு உட்பட தென்னகோன் பற்றிய தகவல்களை முன்கூட்டியே துரையப்பாவுக்கு, வழங்கியதாக கனேடிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கனேடிய அரசாங்கம் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்யவில்லை, இது தனிப்பட்ட விஜயமாக கருதப்பட்டது.
எவ்வாறாயினும், பீல் பிராந்திய காவல்துறையுடன், ரோயல் கனேடிய காவல்துறையின் நெருங்கிய பணி உறவைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கான அதன் இணைப்பு அதிகாரி, துரையப்பாவுக்கு இலங்கையில் உள்ள காவல்துறை அமைப்புகளை சந்திக்கும் ஏற்பாடுகளை வழங்க முன்வந்தார், என்று ரோயல் கனேடிய காவல்துறையின் பேச்சாளர், குளோபல் நியூஸின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |