தேசிய மக்கள் சக்தியின்(NPP) யூ.டி. நிஷாந்த ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.
இவர் இன்று (09) காலை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி விலகல்
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் பதவி விலகலைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.