மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, இன்று (30) லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்மாத (ஏப்ரல்) தொடக்கத்தில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்து.
இதன்படி, அதன் தற்போதைய விலை 4,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


