பிரதமர் பதவியில் மாற்றம் அல்லது அமைச்சரவை மறுசீரமைப்புக்கான செய்திகளை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
வாராந்த அரசாங்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்கு புறம்பானவை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“என்னை( நளிந்த ஜயதிஸ்ஸ)அல்லது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.

“இவை முற்றிலும் பொய்யானவை. பிரதமரை மாற்றவோ அல்லது அமைச்சரவை மாற்றவோ எந்தவிதமான கலந்துரையாடல்களும் அல்லது யோசனைகளும் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.
மேலும், இத்தகைய வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பியிருக்கலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

