தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அடுத்த 6 மாதங்களுக்கு பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை இன்று (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை மின்சார சபையானது மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது.
மின் கட்டணத்தை திருத்தம்
அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களையும் கருத்தில் கொண்டு கட்டண திருத்த முன்மொழிவை திருத்துமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது.
இந்த நிலையில், இன்று சமர்பிக்கபட்ட முன்மொழிவில் அடுத்த 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.