வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக மழை பெய்யாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சில நேரங்களில் ஊவா மாகாணங்களில் பருவமழை பொதுவாக மாலையில் பெய்யும் என்று கடமை முன்னறிவிப்பாளர் உதேனி வீரசிங்க குறிப்பிட்டார்.
புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
இலங்கைக்கு அருகில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது என்ற வதந்திகளையும் திணைக்களம் நிராகரித்தது.

புயல் தொடர்பான பொதுமக்களின் அச்சத்திற்கு எந்த காரணமும் இல்லை என்று திணைக்களம் உறுதியளித்தது.
அனர்த்த நிலை
இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் நத்தம் காரணமாக கிளிநொச்சி – முல்லைத்தீவு
மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட
புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்தன் காரணமாக
போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது.
இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு
வந்தனர்.
இதனை அடுத்து தற்பொழுது இராணுவத்தினரால் மக்களின் பாதுகாப்பிற்காக
பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக
வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும்
பேருந்துகள் புளியம்பக்கடை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.
அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்போக்கரை வரை பேருந்துகள்
தமது சேவையை முன்னெடுக்கின்றனர் இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின்
மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து
வருகின்றனர்.
செய்தி – எரிமலை

