மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டண திருத்தம் எதுவும் செய்யப்படாது என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க (Anura Karunathilake) தெரிவித்துள்ளார்.
நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான எந்த விவாதமும் தற்போது அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்படாது என்று அமைச்சர் இன்று (23) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கட்டண அதிகரிப்பு
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, “நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான எந்த விவாதமும் தற்போது அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்படாது.

அத்தகைய நீர் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.” என்றார்.

