Courtesy: Sivaa Mayuri
அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள், தமது துறைமுகங்களுக்கு வருவதை இலங்கை தடை செய்யாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்
ஜப்பானின் ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கடந்த ஜனவரி மாதம் முதல், ஒரு வருடத்திற்கு வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள், தமது துறைமுகங்களுக்கு வருவதை இலங்கை அரசாங்கம் தடை செய்தது.
2022 இல் சீன கண்காணிப்புக் கப்பலின் இலங்கைத் துறைமுக அழைப்பு தொடர்பில் அண்டை நாடான இந்தியா அதிருப்தியை காட்டிய பின்னர் இந்த தடை நடைமுறைக்கு வந்தது.
இந்தநிலையில், தமது அரசாங்கம் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை வைத்திருக்க முடியாது என்றும் சீனாவை மட்டும் தடுக்க முடியாது என்றும் ஜப்பானிய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் இருப்பதாகவும், ஆராய்ச்சி மிகவும் அவசியமானது என்றும், ஆனால் அது வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என்றும் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் மற்றவர்களுக்கு இடையே ஏற்படும் சர்ச்சையில் தனது நாடு பக்கச்சார்பாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கைக்கு வருத் சீனக் கப்பல்கள், தனது ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் ஏவுகணைகளை கண்காணிக்க முடியும் என்ற அச்சம் ஏற்பட்டதை அடுத்தே, புதுடெல்லி தமது அதிருப்தியை இலங்கையிடம் வெளியிட்டிருந்தது.
எனினும் பீய்ஜிங், தமது கப்பல்களுக்கு அத்தகைய திறன்கள் இல்லை என்று மறுத்திருந்தது.
என்றாலும்கூட இலங்கை வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு ஒரு வருட கால தடையை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.