முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறையில் சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பெரிய நீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள
நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து
பொதுமக்கள் சவப் பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டமான இன்று(9) கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவனையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டம் பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்
பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும்
எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட
நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை.

சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது
எங்கள் சமூகத்தை சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள்
தெரிவித்திருந்தனர்.

அம்பாறையில் சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Non Violent Protest At Liquor Store

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரித்தான உன்னிச்சை என்ற
விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாறை மாவட்டத்தில்
இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த
பிரதேசத்திற் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் வருகை தந்த
நிலையில் குறித்த மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும்
தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.

பின்னர் குறித்த மதுபான சாலையை
அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி
மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து
சென்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/non-violent-protest-at-liquor-store-1728471521

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.