முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் முடிவின் பின் கழுதைகளாக்கப்பட்ட தமிழர் தரப்பு..!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த 21ஆம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, 42.31 சதவீத வாக்குகளை பெற்று நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் தமிழ் கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என ஒன்றை உருவாக்கினர்.

இதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பா. அரியநேத்திரனை பொதுக்கட்டமைப்பின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராக தேர்தலில் களமிறக்கியிருந்தனர்.

இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வடுக்களையும் நீதிக்கான கோரிக்கைகளையும் எடுத்துக் காட்டும் முகமாகவே தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கடும் விமர்சனங்கள் 

இருப்பினும், இந்த தீர்மானத்திற்கு ஒரு சில தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன், இது தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்களும் கேலிக்கைகள், கிண்டல்கள் மற்றும் கேள்விகள் உள்ளிட்டன பஞ்சமில்லாமல் எழ தொடங்கின.

அதேவேளை, தமிழ் தேசியத்தின் நன்மைக்காகவும், இலங்கையில் சுமார் 70 வருடங்களாக நீதி மற்றும் மாற்றத்திற்கான தீர்வை காணும் நோக்கில் போராடி வரும் தமிழ் மக்களுக்காக வெளிநாடுகள் உள்ளிட்ட பலர் பொது வேட்பாளருக்கு ஆதரவும் வழங்கியிருந்தனர்.

தேர்தல் முடிவின் பின் கழுதைகளாக்கப்பட்ட தமிழர் தரப்பு..! | Tamil General Candidate Troll On Social Media 2024

அந்த காலப்பகுதியில் பெரும்பாலானோரின் கருத்துக்கள், பொது வேட்பாளர் ஒரு அர்த்தமற்ற தீர்மானம் என்ற வகையிலேயே அமைந்திருந்தது.

அத்துடன், சில முக்கிய தமிழ் கட்சிகளும், அரசியல்வாதிகளும் கூட இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறிருக்கையில், தேர்தல் நெருங்கிய காலப்பகுதியில், தாம் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடபோவதில்லை என்பதை அறிந்தே போட்டியிடுவதகவும், தமிழ் மக்களின் அவல நிலையையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தும் நோக்கிலேயே தேர்தல் களம் இறங்கியுள்ளதாகவும் பொது வேட்பாளர் ஒரு உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதான நோக்கம் 

இதனை தொடர்ந்து, கடந்த வாரம் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வடக்கு – கிழக்கு உள்ளிட்ட சில தமிழர் பகுதிகளில் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் 2,26343 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

தேர்தல் முடிவின் பின் கழுதைகளாக்கப்பட்ட தமிழர் தரப்பு..! | Tamil General Candidate Troll On Social Media 2024

இதன் தொடர்ச்சியில், பொது வேட்பாளரை ஆதரித்த அந்த குறிப்பிட்ட பகுதி மக்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

அவை, இவ்வாறு ஆதரவு வழங்கியோரை கழுதைகளுக்கு ஒப்பிடும் வகையில், கேலி சித்திரங்கள் கொண்ட புகைப்படங்களாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அத்துடன், குறிப்பிட்ட ஆதரவாளர்களை அறிவற்ற சமூகம் என அடையாளப்படுத்தும் விதத்திலும் ஏனைய தமிழ் மக்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்பட்டவர்கள் என கூறும் விதத்திலும் அதனை பகிர்பவர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.