வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் (N. Vedanayagam) மற்றும் இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று (Jaffna) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ். தீவுப் பகுதி மக்களின் கடல் போக்குவரத்து மற்றும் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கான வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டது.
இராணுவத்தினரை வெளியேற அதிரடி உத்தரவு
இதேவேளை, யாழ். (Jaffna) வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலைமையகமத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றிலிருந்து (18) பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அநுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இந்த உத்தரவு இராணுவ தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.