உயிரிழந்த கடற்படை அதிகாரிக்கு நட்டஈடு வழங்குவதற்காக இந்திய இழுவை படகுகளை விற்க முயல்வதை ஏற்க முடியாது என வடமராட்சி – வடக்கு கடற்றொழிலாளர்
கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna)- வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (20.07.2024) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ” சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உயிரிழந்த கடற்படை அதிகாரிக்கு நட்டஈடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால், அதை இந்திய இழுவைபடகுகளை விற்றுத்தான் வழங்க வேண்டும் என்பதை எங்களால் ஏற்க முடியாது.
மேலும், அதே போன்ற நட்டஈடுகளை எங்களுடைய மக்களுக்கும் கொடுங்கள். உயிரிழந்த மக்களுக்கும் அவர்களின் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கும் கொடுங்கள்.
அதைவிடுத்து, தற்போது நடந்த சம்பவத்திற்கு மாத்திரம் நட்டஈடு வழங்க முன்வருவதை ஏற்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,