வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்காமல் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ‘கிளி முயற்சியாளர் சந்தை’ நேற்று(21.03.2025) திறந்து வைக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“சிறுதொழில்
முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகின்றது.
இவர்களுக்கான சந்தைப்படுத்தல் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவாலாக இருந்தது.
உலக வங்கியின் உதவி
இப்போது வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் எதிலும் வெற்றியடைய தூரநோக்கு இருக்கவேண்டும்.

உங்களுக்கு அது
இருக்கின்றமையை வரவேற்று பாராட்டுகின்றேன். உங்களுக்கு மேலும் பல வசதிகள்
செய்து தரப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகளுக்கு உலக வங்கி
உதவி செய்யும் சூழல் உருவாகியிருக்கின்றது. அவற்றை நாம் பயன்படுத்தி
முன்னேறவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.








