Courtesy: Sivaa Mayuri
அமைச்சுச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும், முதிர்ச்சியடையும் திறைசேரி கொடுப்பனவுகள் மற்றும் பத்திரங்களை மீளச் செலுத்துவதற்கும் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து நிதி திரட்டுவது அசாதாரணமான செயல் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் அனில் ஜயந்த இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அன்றாட அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டவும் அதன் சேவைகளை தொடரவும் நிதி தேவைப்படுகிறது.
சாதாரண நிதி சேகரிப்பு
எனவே, திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு வாரமும் மத்திய வங்கி நிதி திரட்டுகிறது என்று ஜயந்த கூறியுள்ளார்.
நடப்பது சாதாரண நிதி சேகரிப்பு தான். அது தவிர, உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து சிறப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான நிதி திரட்டல் எதுவும் இல்லை என்றும் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜயந்தவின் இந்த கருத்துக்கள், புதிய அரசாங்கம் சர்வதேச சந்தைகளில் இருந்து கடன்களை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டும் அறிக்கைகளை தொடர்ந்தே வெளியாகியுள்ளன.