வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் இன்று (27) அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய வங்கியிடம் தேவையான பண கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடன் வட்டி வீதங்கள்
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.