13வது திருத்தத்தை தற்போதைய வடிவில் மட்டுமே நடைமுறைப்படுத்துவோம் எனவும், மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தி (npp) வழங்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பௌத்தம், சிங்கள கலாசாரம் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (ACBC) ஒழுங்கு செய்த கூட்டத்தின் போதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
13வது திருத்தம்
13வது திருத்தம் தேசிய பிரச்சினை அல்லது மாகாண அபிவிருத்திக்கான தீர்வு அல்ல என்ற கருத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பௌத்தத்திற்கு முதல் இடம்
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் அதேவேளை இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின், 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது அதற்காக ஜே.வி.பி பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து செய்வதாகவும் உறுதியளித்தார்.