முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைந்த விலையில் உணவு! இன்று நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் வேலைத்திட்டம்

மக்களுக்கு உணவு பாதுகாப்பை உருவாக்கி, மலிவு விலையில் போஷாக்கான உணவை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு மேம்பாட்டு சபையின் ‘பெலஸ்ஸ” உணவகத்தில் இன்று (01) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தூய்மையான இலங்கை

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் “தூய்மையான இலங்கை” திட்டத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

குறைந்த விலையில் உணவு! இன்று நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் வேலைத்திட்டம் | Nutritious Food At Affordable Prices

இந்த வேலைத்திட்டத்தினூடாக குறைந்த விலையில் இருநூறு ரூபாய் அளவில் ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பு உணவை மக்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சத்தான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரசு மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இங்கு பொதி செய்யப்பட்ட உள்ளூர் உணவுகள் மற்றும் சத்தான தின்பண்டங்கள் மலிவு விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த கலந்து கொண்டுள்ளார்.

குறைந்த விலையில் உணவு! இன்று நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் வேலைத்திட்டம் | Nutritious Food At Affordable Prices

இதன்போது தரமான, ஆரோக்கியமான மற்றும் அளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக சமூகத்தில் வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் மனப்பாங்கு மேம்பாட்டை உருவாக்கும் நோக்கில் தூய்மை இலங்கை வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You may like this,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்