மலையக பெருந்தோட்டங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு உணவு பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற கூடத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய வேலைத்திட்டம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக 3,000 கர்ப்பிணி பெண்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்கும் புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.