Courtesy: Thivagaran
நுவரெலியாவின் (Nuwara Eliya) வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின்
மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (19.05.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அயோத்தி இராமர் கோயில்
மற்றும் சீதையின் பிறப்பிடமாக கருதப்படும் நேபாளத்திலிருந்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின்
தீர்த்தம் ஆகியன கொண்டு வரப்பட்டன.
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு
புனித நீர்
குறிப்பாக, இந்தியாவின் (India) உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப்
பாயும் சரயு ஆற்றில் இருந்து 25 லீற்றர் புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட புனித நீரினை ஆலயத்தின் கலசத்தில் ஊற்றி சிறப்பு
அபிஷேகங்களும் ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் முக்கிய அரசியல்
பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான இலங்கை பக்தர்களும் நூற்றுக்கும் அதிகமான இந்திய பக்தர்களும் கலந்துகொண்டுடுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நல்லிணக்கம் சார்ந்த கலந்துரையாடலுடன் திருப்பதியில்
இருந்து நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப்
பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டும்
அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனையில் ஒரு பகுதியளவு நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது : ஹரீஸின் கருத்துக்கு கோடீஸ்வரன் பதிலடி
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |