முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : 9A சித்தி பெற்ற மாணவர்கள்

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari)  தெரிவித்துள்ளார்.

இது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்றுள்ளதாகவும் இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15% என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பரீட்சைகள் திணைக்களம்

இந்தநிலையில், மாகாண ரீதியாக மாணவர்களின் சித்தி சதவீதம் வெளியாகியுள்ளது.

அதன்படி, மேல் மாகாணம் 74.47%, மத்திய மாகாணம் 73.91%, தென் மாகாணம் 75.64%, வடக்கு மாகாணம் 69.86%, கிழக்கு மாகாணம் 74.26%, வடமேல் மாகாணம் 71.47%, வட மத்திய மாகாணம் 70.24%, ஊவா  மாகாணம் 73.14,  சப்ரகமுவ மாகாணம் 73.47% என பதிவாகியுள்ளது.

வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : 9A சித்தி பெற்ற மாணவர்கள் | Ol Exam Results Out 237026 Students Eligible To Al

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சை பெறுபேறுகள் இன்று (11) காலை வெளியான நிலையில் மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமோ அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் தொலைபேசி இலக்கமான 0112-785922, 0112-784208, 0112-786616 மற்றும் 0112-784537 ஆகியவற்றின் மூலமோ விசாரணைகளை மேற்கொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,664 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாவர்.

பெறுபேறுகள் பட்டியல்

இதற்கிடையில், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அந்தந்தப் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி, அச்சிடப்பட்ட பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல், அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : 9A சித்தி பெற்ற மாணவர்கள் | Ol Exam Results Out 237026 Students Eligible To Al

அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு பெறப்படும் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் பட்டியல், உயர்தர வகுப்புகளுக்கு சேருவதற்கு செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் பட்டியல் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பட்டியல் அந்த விண்ணப்பதாரர்களுக்கும் மீள் மதிப்பீட்டிற்குப் பின்னர் வழங்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.